நைஜீரியாவில் நூற்றுக்கணக்கான மாணவிகள் கடத்தப்பட்டுள்ளது பெற்றோர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரிய நாட்டின் வடமேற்கு பகுதியில் இருக்கும் ஜாம்பாரா என்ற பகுதியில் பள்ளி விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவிகள் கடத்தப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் பீதியடைந்துள்ளனர். ஆயுதமேந்தி விடுதிக்குள் நுழைந்த கொலைகார கும்பல் தான் மாணவிகளை கடத்தியதாக தெரிய வந்துள்ளது. தற்போது நைஜீரியாவில் மாணவிகள் கடத்தப்படுவது என்பது ஒன்றும் புதிதல்ல. அண்மைக்காலமாகவே ஆயுதமேந்திய கிரிமினல் கும்பல்கள் பள்ளி மாணவிகளையும், சிறுமிகளையும் கடத்தி பணம் பறிக்க முயற்சி செய்து வருகின்றனர்.
மேலும் சில சமயங்களில் பாலியல் வன்புணர்வு செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்த கொள்ளைக் கும்பலை நைஜீரியா அரசும் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றனர். இந்த கடத்தலில் சுமார் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கடத்தப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.