Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஆஸ்பத்திரிக்கு போயிருந்தேன் ஐயா..! போலீசிடம் கதறிய தனியார் நிறுவன ஊழியர்… மயிலாடுதுறையில் பரபரப்பு..!!

மயிலாடுதுறையில் வீட்டின் கதவை உடைத்து ரூ.5 1/2 லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மல்லியம் கிராமத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணமூர்த்தி என்ற தந்தை உள்ளார். பாலமுருகன் புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இவரது தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பாலமுருகனும், அவரது குடும்பத்தினரும் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது.

அதனை அறிந்த சில மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்துள்ளனர். இதையடுத்து வீட்டிற்குள் இருந்த பொருட்களை சிதறி, 3 பீரோல்களையும் உடைத்து 17 பவுன் நகை, 450 கிராம் வெள்ளி ஆகிய பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்நிலையில் பாலமுருகன் உறவினர் ஒருவர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீடு திறக்கப்பட்ட நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து வீட்டிற்குள் சென்று பார்த்த போது மர்ம நபர்கள் வீட்டிற்குள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

பின்னர் இந்த சம்பவம் குறித்து அவரது உறவினர் பாலமுருகனுக்கு தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் பேரில் பாலமுருகன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது ரூபாய் 5 1/2 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து பாலமுருகன் குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |