Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மருந்தக குடோனை உடைத்து திருட்டு… சி.சி.டிவியில் சிக்கிய மர்ம நபர்… போலீஸ் வலைவீச்சு..!!

பெரம்பலூரில் மருந்தக குடோனை உடைத்து ரூ.76 ஆயிரம் பணம் மற்றும் பொருள்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூரில் சிவனேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மருந்தக குடோன் வைத்து வேலை பார்த்து வந்துள்ளார். அந்த குடோனில் இருந்து பெரம்பலூரில் உள்ள மருந்தக கடைகளுக்கு மருந்து பொருட்களை விநியோகம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பெரம்பலூரில் வசித்து வரும் இளங்கோ, மருந்தக குடோனை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின் காலையில் குடோனுக்கு சென்று பார்த்தபோது குடோன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் குடோன் உள்ளே சென்று பணம் வைக்கப்பட்டிருந்த டிராயரை திறந்து பார்த்துள்ளார்.

அப்போது ரூ.76 ஆயிரம், அலமாரியில் வைத்து ரூ.10 ஆயிரம் பரிசு பொருட்கள், 2 செல்போன்கள் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கைரேகை நிபுணர்களை வைத்து தடயங்களை சேகரித்துள்ளனர். மேலும் குடோனில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது, திருட்டில் ஈடுபட்டிருந்த மர்ம நபரின் உருவம் பதிவாகியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |