காரைக்குடி அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் தங்க நகையை பறித்துச் சென்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே அம்பேத்கர் நகரில் சிதம்பரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி ராதா. சம்பவத்தன்று ராதா உறவினர் ஒருவரின் வீட்டிற்கு கானாடுகாத்தான் பகுதிக்கு மொபட்டில் சென்றுள்ளார். அப்போது கல்லூரி சாலை வழியே சென்று கொண்டிருந்தபோது வாலிபர் ஒருவர் ராதாவை வழி மறித்துள்ளார்.
இதையடுத்து ராதாவின் கழுத்தில் இருந்த நான்கு பவுன் தங்க நகையை பறித்து கொண்டு அவரை கீழே தள்ளி விட்டு வாலிபர் தப்பி ஓடியுள்ளார். இதில் ராதாவிற்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ராதா சாக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து நகையை பறித்துச் சென்ற வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.