Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இங்க தான நிறுத்தி வச்சிருந்தோம்..! அதிர்ச்சியில் உறைந்த காவல்துறையினர்… விசாரணையில் சிக்கிய வாலிபர்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினரின் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மெக்கானிக் கைது செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல்துறையினரின் சைரனுடன் நின்று கொண்டிருந்த ரோந்து மோட்டார் சைக்கிள் திருடு போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் வழக்குப்பதிந்து காணாமல் போன மோட்டார் சைக்கிளை தேடி வந்தனர். இந்நிலையில் காவல்துறை ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று வடமதுரை ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது.

அதனை கண்ட பொதுமக்கள் வடமதுரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மோட்டார்சைக்கிளை கைப்பற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்த நம்பர் பிளேட்டுகள், சைரன் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதோடு அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

அப்போது வடமதுரை அருகே உள்ள முள்ளாம்பட்டி பகுதியில் வசித்து வரும் மெக்கானிக் சூர்யா தான் மோட்டார் சைக்கிளை திருடி சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை திருடியதை ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |