வீட்டிற்குள் புகுந்து பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள டி.டி.சி நகரை சேர்ந்தவர் பிரகாஷ்-சௌந்தர்யா தம்பதியினர். இவர்கள் இருவரும் வீட்டில் இருந்த பொழுது திடீரென்று ஒரு மர்ம நபர் வீட்டிற்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி சௌந்தர்யா அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார். இதனை தடுக்க முயன்ற பிரகாசை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து சௌந்தர்யா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது