Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்றிருந்த இளம்பெண்ணிற்கு… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… சிவகங்கையில் பரபரப்பு..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பூவந்தி அருகே வீட்டின் கதவை உடைத்து நகையை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பூவந்தி போலீஸ் சரகத்தை சேர்ந்த இலுப்பக்குடி கிராமத்தில் வசித்து வரும் சாமிநாதன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பிரியா ( 28 ) என்ற மனைவி உள்ளார். இவர் வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்றுள்ளார். அதன் பின் வீட்டுக்கு பிற்பகலில் வந்துள்ளார். அப்போது அங்கு வீட்டில் உள்ள கதவு உடைக்கப்பட்டு நிலையில் இருந்துள்ளது.

அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பீரோவை ஆய்வு செய்த போது அதிலிருந்த மோதிரங்கள், செயின்கள், தோடுகள் என 12 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இந்த திருட்டு குறித்து பூவந்தி காவல் நிலையத்தில் பிரியா புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |