தஞ்சாவூர் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் திருடு போன சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி பகுதியில் சதீஷ் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமண விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக பூண்டி மாதா ஆலயம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அங்கு திருமண மண்டபத்திற்கு அருகில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மண்டபத்திற்குள் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சதீஷ் கண்ணனின் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் திருமண விழாவிற்கு சென்றுவிட்டு திரும்பி வந்த சதீஷ் கண்ணன் மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த திருட்டு குறித்து அவர் திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை திருடிய மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.