கோவை சிங்காநல்லூர் அருகே தொழிலதிபர் ஆதம் ஷா என்பவரது வீட்டை உடைத்து 100 சவரன் நகை மற்றும் 10 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆதம் ஷா கோவையில் சிங்கநல்லூரில் வசித்து வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தாருடன் சிவகாசியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வீடு திரும்பிய ஆதம் ஷா வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதையும் படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 100 சவரன் நகை மற்றும் 10 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து போலீஸாரிடம் வழக்கு பதிவு செய்த பின்னர் போலீசார் விரைந்து வந்து சோதனை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களின் கைரேகையை வீடு முழுவதும் தேடி ஆராய்ந்து வருகின்றனர். பின்னர் அந்த வீட்டில் சிசிடிவி இல்லாததால் அருகில் உள்ள வீடுகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.