2 1/2 பவுன் தங்க சங்கிலியை திருட முயற்சித்த பெண்ணை கையும் களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள திருவேற்காடு பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இவர்கடந்த சில நாட்களுக்கு முன்பு நாசரேத் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் பாலமுருகன் தனது குடும்பத்தினருடன் மாசித்திருவிழா தேரோட்டம் பார்ப்பதற்காக திருச்செந்தூருக்கு சென்றபோது, அவர் தனது சித்தி அணிந்திருந்த தங்க சங்கிலி அறுந்து விட்டதால் அதை வாங்கி தனது சட்டைப்பையில் வைத்திருந்துள்ளார்.
அப்போது கோவில்பட்டி மந்தித்தோப்பு பகுதியில் வசித்து வரும் மல்லிகா என்ற பெண் அந்த 2 1/2 பவுன் சங்கிலியை திருட முயற்சிக்கும் போது, கையும் களவுமாக மாட்டிக்கொண்டார். இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் பாலமுருகன் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மல்லிகாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.