Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இளம்பெண்களை வைத்து வழிப்பறி செய்த கடத்தல் கும்பல் ….!!!!

சேலத்தில் இளம்பெண்களை வைத்து இளைஞர்களிடம் வழிப்பறி செய்த கடத்தல் கும்பலை கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் இளம்பெண்களை கொன்டு இளைஞர்களை கடத்தி வழிப்பறி செய்த இரு பெண்கள் உள்பட 4 பேர் கொண்ட கும்பலை வாழப்பாடி காவல் துறையினர் கைது செய்தனர். ஒரு கும்பல் சேலத்தில் இருந்து தனியாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களை வழிமறித்து பல்வேறு நூதன முறையில் பெண்கள் மூலம் கையாண்டு கொள்ளையடித்து வருவதாக புகார் எழுந்தது.  மேலும் பலரிடமும் அந்த கும்பல்  கைவரிசையை காட்டியதாக கூறப்படுகிறது.

Related image

இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து அந்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து விசாரணை நடத்திய காவல்துறையினர் இளம்பெண்கள் இருவர் உள்பட 4 பேரை சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். 4 பேரையும் வாழப்பாடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க காவல்துறையினர் முயற்சித்து வருகின்றனர்.

Categories

Tech |