விவசாயி வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கோவில்மாதிமங்கலம் கிராமத்தில் விஸ்வநாதன் என்ற விவசாயி வசித்து வருகிறார் இவர் தனது குடும்பத்துடன் விவசாய நிலத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அவரின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 25 ஆயிரம் ரொக்கம் மற்றும் 20 பவுன் நகை ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விசுவநாதன் கடலாடி காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அங்கு பார்வையிட்டனர். அதோடு கை ரேகை நிபுணர்கள் அங்குள்ள தடயங்களை ஆய்வு செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்த போலீசார் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.