ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த பெண்ணை வழிமறித்து அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செல்வவிளை பகுதியில் ரதி குமாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதிக்கு வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார். அதன்பின் தனக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு தனது ஸ்கூட்டரில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்த போது, இவரது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் ராஜகுமாரியை திடீரென வழிமறித்தார்.
அப்போது அவர் சற்றும் எதிர்பாராத சமயத்தில் ரவிக்குமாரை தாக்கிவிட்டு அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனை அடுத்து இவரது கூச்சல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த வாலிபரை பிடிக்க முயற்சித்த போதும், அவர்களால் முடியவில்லை. இதுகுறித்து ரதி குமாரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.