Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வழிமறித்த மர்ம நபர்கள்…. நண்பர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீசாரின் தீவிர விசாரணை…!!

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நண்பர்களை வழிமறித்து மர்ம நபர்கள் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மேலக்கரந்தை பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மேலூர் பகுதியில் வசித்து வரும் சந்திரன் என்ற நண்பருடன் இணைந்து ஆடு வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஆடுகளை வாங்குவதற்கு நண்பர்கள் இருவரும் எட்டயபுரம் சென்றுள்ளனர். இந்நிலையில் இவர்கள் மேலக்கரந்தைக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்று கொண்டிருக்கும் போது, இவர்களின் பின்னால் ஒரு மோட்டார் சைக்கிள் சென்றுள்ளது.

இதனையடுத்து அதிலிருந்த 3 மர்ம நபர்களும் சந்திரன் மற்றும் முருகனை வழிமறித்து அவர்களை தாக்கியதோடு, அவர்களிடமிருந்த 60 ஆயிரம் பணம், 12 கிராம் தங்க மோதிரம் மற்றும் செல்போன் போன்றவற்றை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவம் குறித்து அவர்கள் எட்டையபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |