முகவரி கேட்பது போல மூதாட்டி அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் சுசிலா என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவர் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு பிள்ளையார் கோவிலில் அமர்ந்து இருந்த போது, அவ்வழியாக இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அப்போது சுசிலாவிடம் முகவரி கேட்பது போல் பேச்சு கொடுத்து சுசிலா அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பின்னால் அமர்ந்திருந்த நபர் பறித்தார்.
அதன்பின் மோட்டார் சைக்கிளில் இருவரும் வேகமாக தப்பித்து சென்று விட்டனர். இச்சம்பவம் குறித்து அந்த மூதாட்டி திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மூதாட்டியின் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.