Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மிரட்டப்பட்ட மாணவர்கள்…. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

கத்திமுனையில் கல்லூரி மாணவர்களை மிரட்டி கொள்ளையடித்த மர்ம நபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் சந்திப், அனிஷ், அழகேஸ்வரன் என்ற 3 பேர் தங்கி ஹோட்டல் மேனேஜ்மென்ட் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கல்லூரி மாணவர்கள் மூன்று பேரையும் கோடம்பாக்கத்தில் உள்ள பாலத்திற்கு கீழ் மர்ம நபர்கள் அழைத்துச் சென்று கத்தி முனையில் அவர்களை மிரட்டியுள்ளனர். அதன் பின் அவர்களிடமிருந்த ஏ.டி.எம் கார்டை வாங்கி கொண்டு, ஏ.டி.எம்-மில் இருந்த 20 ஆயிரம் பணத்தை எடுத்து சென்றதோடு, அவர்களிடமிருந்த 2 செல்போன்களையும் பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவம் தொடர்பாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அந்த மாணவர்கள் புகார் அளித்தனர்.

இதனையடுத்து உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அந்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடினர். இந்நிலையில் இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரில், இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்களில் ஒருவர் காமராஜர் காலனியில் வசித்து வரும் நரேஷ் என்பதும், மற்றொருவர் ஸ்டீபன் என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. அதோடு இவர்கள் கொள்ளையடித்து சென்ற 20 ஆயிரத்தை ஆளுக்கு 5 ஆயிரம் ரூபாயாக பிரித்து எடுத்துக் கொண்டதாக அவர்கள் போலீசாரிடம் கூறினர். அந்த பணத்தை கொள்ளையர்கள் மதுவிற்காக செலவிட்டுள்ளனர். இதனால் போலீசாரால் அந்த பணத்தை பறிமுதல் செய்ய முடியாத காரணத்தால் அவர்களிடமிருந்த ஒரு செல்போனை மட்டும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |