Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பேருந்துக்காக நின்று கொண்டிருந்தவர்… திடீரென வந்த வாலிபர் செய்த செயல்… கைது செய்த காவல்துறை…!!

பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவரிடம் பணம் மற்றும் செல்போன் திருடிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் பகுதியில் சிவா என்பவர் வசித்துவருகிறார். இவர் நாமக்கல் சேந்தமங்கலம் சாலையில் உள்ள மின் மயானம் அருகில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த வாலிபர் சிவாவிடம் இருந்து 2000 பணம் மற்றும் செல்போனை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து சிவா சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். அந்த விசாரணையில் நாமக்கல் மேட்டு தெருவில் வசித்துவரும் பால்ராஜ் என்பவர் சிவாவிடம் பணம் செல்போனை பறித்து சென்றது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து குற்றவாளியான பால்ராஜை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |