ரயிலில் வைத்து பெண்ணிடம் 3 வாலிபர்கள் வழிப்பறி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தெய்வானை என்ற மனைவி உள்ளார். கடந்த மாதம் 26ஆம் தேதி இந்த தம்பதிகள் சென்னையில் இருந்து மதுரை சென்ற பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ரயில் திருச்சி முடுக்குபட்டு ரயில்வே கிராசிங்கில் நின்று கொண்டிருந்தபோது, தெய்வானை கையில் இருந்த பையை 3 மர்ம நபர்கள் பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
அதில் செல்போன், ஏ.டி.எம் கார்டு மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பணம் இருந்துள்ளது. இதுகுறித்த தெய்வானை ரயில்வே காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிந்து விசாரணை நடத்திய காவல்துறையினர் பெண்ணிடம் வழிப்பறி செய்த குற்றத்திற்காக நாகூர், துரைராஜ், சூர்யா ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.