Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

லாரியை தட்டினது யாரு…? நள்ளிரவில் நடந்த சம்பவம்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

லாரி டிரைவரிடம் இருந்து பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற சிறுவன் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்திலுள்ள கடாரங்கொண்டான் கிராமத்தில் வேல்முருகன் என்ற லாரி டிரைவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் கிளீனர் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் லாரியில் ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு வேல்முருகன் மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரும்  உடையார்பாளையம் பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது அசதியாக இருந்ததால் இரண்டு பேரும் லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு தூங்கியுள்ளனர். இதனையடுத்து நள்ளிரவு நேரத்தில் யாரோ லாரியை தட்டுவது போல சத்தம் கேட்டதால் இருவரும் கண்விழித்து பார்த்துள்ளனர்.

அப்போது திடீரென வந்த 2 மர்ம நபர்கள் வேல் முருகனிடமிருந்த 2000 ரூபாய் பணம் மற்றும் செல்போனை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து வேல் முருகன் உடையார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய 2 பேரையும் தேடி வந்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் உடையார்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் காவல்துறையினர் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்துள்ளனர். இதனையடுத்து அந்த நபர்கள் ஜெயங்கொண்டம் பகுதியில் வசிக்கும் அருண் மற்றும் 17 வயது சிறுவன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் தான் வேல்முருகனிடம் இருந்து பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றுள்ளனர். அதன்பின் இரண்டு பேரையும் கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |