பெண்ணிடம் பணம் மற்றும் செல்போனை பறித்து விட்டு தப்பி ஓடிய 2 பேரை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் கற்பகம் என்ற பெண் சென்னையில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து இந்த பெண் கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே இருக்கும் 100 அடி சாலை நடைபாதையில் அமர்ந்து கொண்டிருந்தார். இதனையடுத்து கற்பகத்தை மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை 2 மர்ம நபர்கள் பறித்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கற்பகம் அலறி சத்தம் போட்டதால் பொதுமக்கள் 2 மர்ம நபர்களையும் பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
அதன்பின் பொதுமக்கள் இரண்டு பேரையும் கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திருட முயற்சி செய்த நபர்கள் கணேசன் மற்றும் அகமது என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த பணம் மற்றும் செல்போனை மீட்டு கற்பகத்திடம் ஒப்படைத்து விட்டனர்.