Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கவனமா இருக்க கூடாதா…. மர்ம நபரின் கைவரிசை…. வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

பெண்ணிடம் இருந்து 5 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள வல்லம் கிணற்று தெருவில் சக்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமாமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் குற்றாலம் அருகில் இருக்கும் இலஞ்சி குமாரர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று உள்ளனர். இதனை அடுத்து ரமாமணி ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த மர்ம நபர் ரமாமணியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து ரமாமணி குற்றாலம் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |