Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இதுக்காக தான் வந்தியா…? வாலிபரின் மூர்க்கத்தனமாக செயல்… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

தண்ணீர் கேட்பது போல் நடித்து பெண்ணிடம் கத்திமுனையில் நகை பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள விருகம்பட்டி பகுதியில் தங்கமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேலுமணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வேலுமணி மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு வாலிபர் அங்கு சென்றுள்ளார். இதனை அடுத்து அந்த வாலிபர் யாராவது முயலுக்கு இங்கே வலை வைத்திருக்கிறார்களா என்று விசாரித்ததற்கு வேலுமணி இல்லை என்று பதில் கூறியுள்ளார். அதன் பின் அந்த வாலிபர் வேலுமணியின் கையில் இருந்த தண்ணீரை கேட்டுள்ளார். அதனை கொடுப்பதற்காக வேலுமணி முற்படும் போது அந்த வாலிபர் அவரது கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை தட்டிவிட்டு கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.

இதனை தொடர்ந்து வேலுமணி அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அந்த வாலிபர் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து குடிமங்கலம் காவல் நிலையத்தில் வேலுமணி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்ததில் அவர் பிரபாகரன் என்பதும், வேலுமணியிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்றதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் கத்தியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |