Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கல்லை கட்டி வீசப்பட்ட இரு சடலம்” வழிப்பறி வழக்கில் கைதானவர்கள்…. பரபரப்பு வாக்குமூலத்தில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள நந்தனம் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் ராமகிருஷ்ணன் என்ற முதியவரிடம் இருந்து கடந்த 13-ஆம் தேதி ஒரு கும்பல் 10 பவுன் தங்க நகை மற்றும் காரை வழிப்பறி செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த சைதாப்பேட்டை காவல் துறையினர் சிவகங்கை பகுதியில் தலைமறைவாக இருந்த கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த ராகப்பன் என்ற ரவிக்குமார், அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன், ஏழுமலை, வெங்கடேசன், நெல்சன், மதன்ராஜ் போன்ற 6 பேரை கைது செய்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கில் கைதான ராக்கப்பன் காவல்துறையிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வாக்குமூலத்தில் இவர்கள் 6 பேரும் இணைந்து இரண்டு பேரை கொலை செய்து அவர்களது சடலங்களை கல்லை கட்டி கிணற்றில் வீசியது தெரிய வந்துள்ளது. அதாவது கொலை செய்யப்பட்டவர்களில் ஒருவரான அண்ணாதுரையின் உறவினரான ஆனந்தராஜ் என்பவருக்கும், ஆவடி நகராட்சி பகுதியில் வசித்து வரும் கவுன்சிலரான பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.

இதனால் இந்த ஆறு பேரும் அண்ணாதுரை கூறியதால் கவுன்சிலர் முருகனை கொலை செய்துள்ளனர். இந்நிலையில் அண்ணாதுரை கொலை வழக்கு நடத்த செலவுக்கு பணம் தராமல் 6 பேரையும் ஏமாற்றி வந்துள்ளார். இதனையடுத்து அண்ணாதுரை இடம் கிண்டியில் இடம் பார்க்க வருமாறு கடந்த 9ஆம் தேதி ராகப்பன் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அண்ணாதுரையும் அவரது நண்பர் தங்கபாண்டி என்பவரும் இடத்தை விற்பனைக்கு வாங்க வந்துள்ளனர்.

இதனை அடுத்து அவர்கள் அனைவரும் அப்பகுதியில் உள்ள காலி இடத்தில் மது அருந்திக் கொண்டிருக்கும்போது, கொலை வழக்கு விவகாரத்தில் பணம் தருவது தொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த ஆறு பேரும் அண்ணாதுரையும் அவருடன் வந்த தங்க பாண்டியையும் தாக்கியதில் இருவரும் உயிரிழந்துவிட்டனர். இதனை மறைப்பதற்காக அவர்களது உடலில் கல்லை கட்டி அப்பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் ஆறு பேரும் வீசிவிட்டு சென்றுள்ளனர்.

அதன் பிறகு இந்த கொலை வழக்கை நடத்துவதற்கு தேவைப்பட்ட பணத்திற்காக முதியவரிடம் இருந்து வழிப்பறி செய்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில் காவல்துறையினர் கொலை செய்யப்பட்டவர்களின் சடலங்களை அழுகிய நிலையில் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இவ்வாறு வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் கொலை செய்ததாக அளித்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |