லண்டன் ரயில்நிலையத்தில் மர்மநபர் ஒரு பெண்ணை கழுத்தை நெரித்து அவரிடமிருந்த செல்போனை பறித்து சென்ற சம்பவம் தொடர்பில் சிசிடிவி புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
லண்டனிலுள்ள பெக்ஸ்லே ரயில்நிலையத்தில் கடந்த 8ஆம் தேதி அன்று மாலையில் ஒரு பெண் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென்று ஒரு நபர் அவருக்கு பின்னால் வந்து அவரை தள்ளி விட்டுள்ளார். அதன்பின்பு அவரின் கழுத்தை நெரித்துள்ளார். இதனால் அதிர்ந்துபோன அந்த பெண் கையிலிருந்த செல்போனை கீழே போட்டுள்ளார்.
அதனை எடுத்துக்கொண்டு அந்த நபர் தப்பி ஓடியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் சிசிடிவி புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். அதில் ஒரு நபர் கறுப்பு நிற ஆடை அணிந்து முகக்கவசம் அணிந்திருக்கிறார். அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டால் என்ன நடந்தது என்று தெரிய வரும் என காவல்துறையினர் கூறியுள்ளார்கள். மேலும் அந்த நபர் குறித்து அடையாளம் தெரிந்தவர்கள் தங்களிடம் உடனடியாக தெரிவிக்குமாறும் கேட்டுள்ளனர்.