Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இப்படியெல்லமா பண்ணுவாங்க… ஓடும் பேருந்தில் நடந்த சம்பவம்… சேலத்தில் பரபரப்பு…!!

ஓடும் பேருந்தில் வங்கி மேலாளரிடமிருந்து ரூபாய் 9 லட்சத்தை திருடிய 2 நபர்களை போலீசார் கைது செய்ததோடு, மற்ற குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள நரசோதிபட்டி பகுதியில் வீரமணி என்பவர் வசித்துவருகிறார். இவர் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் ஆவர். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் ஈரோட்டில் உள்ள தனது மகள் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர். அப்போது அவர்கள் தங்கள் மகளின் தேவைக்காக ரூபாய் ஒன்பது லட்சத்தை ஒரு பேக்கில் எடுத்து சென்றுள்ளனர். இவர்கள் இருவரும் சங்ககிரி புதிய பேருந்து நிலையத்திற்கு சென்றபோது, அந்த பேருந்தில் நான்கு நபர்கள் ஏறி உள்ளனர்.

இந்நிலையில் வீரமணி மற்றும் ராஜேஸ்வரி அமர்ந்திருந்த இருக்கையின் அருகில் நின்ற அந்த 4 நபர்களில் ஒருவர் தன்னுடைய ஐந்து ரூபாய் நாணயம் கீழே விழுந்து விட்டது எனவும், அதனை எடுப்பதற்கு உங்களுடைய பேக்கை எடுங்கள் என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து வீரமணி அந்த பேக்கை எடுத்து, தான் அமர்ந்திருந்த பேருந்து இருக்கையின் மேலே வைத்துவிட்டு இருக்கையில் அமர்ந்து விட்டார். அதன்பின் அந்த நபர்கள் 4 பேரும் பேக்கில் வைத்திருந்த 9 லட்சத்தை திருடிவிட்டு சங்ககிரி பழைய பேருந்து நிலையத்தில் இறங்கி விட்டனர்.

இதனை கவனிக்காத வீரமணி ஈரோட்டிற்கு சென்று பார்த்தபோது, பேக்கில் இருந்த பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இச்சம்பவம் குறித்து சங்ககிரி காவல் நிலையத்தில் வீரமணி புகார் அளித்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சங்ககிரி ஆர்.எஸ் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் தீவிரமாக விசாரித்தபோது, அந்த நபர்கள் திருப்பத்தூர் தாண்டவராயன் பகுதியில் வசித்து வரும் ரவிச்சந்திரன் என்பதும், மற்றொருவர் ஸ்ரீநிவாச பாண்டியன் என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. மேலும் பேருந்தில் ஒன்பது லட்சத்தை திருடியதை அவர்கள் ஒப்புக் கொண்டுவிட்டனர். இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் வைத்திருந்த 8 லட்சம் ரூபாயை கைப்பற்றி விட்டனர். மேலும் இந்த வழக்கில் மற்ற குற்றவாளிகளான தமிழ்வாணன் மற்றும் பாலமுருகன் என்பவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |