Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாமிட்டையே கைய வச்சிட்டீங்களேடா…. மர்ம நபர்கள் செய்த வேலை…. போலீஸ் விசாரணை…!!

கோவிலின் உண்டியலை உடைத்து திருடிய சம்பவம் திருமங்கலம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் தெக்கூர் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்தபின் பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் நடுஇரவில் மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் மற்றும் 15 கோவில் மணிகளை திருடி சென்றுள்ளனர்.

நேற்று வழக்கம்போல் பூசாரி  காலை கோவிலை திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு பூசாரி அதிர்ச்சி அடைந்து கூடக்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |