Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நான் சும்மா தானே போனேன்… வாலிபர்களின் மூர்கத்தனமான செயல்… கைது செய்த காவல்துறையினர்…!!

கூலி தொழிலாளியிடம் 3 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியமங்கலம் பூக்கடை பகுதியில் போஸ் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் போஸ் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு அம்பிகாபுரம் பகுதியில் வசிக்கும் ராஜாமுகமது, வினோத்குமார், லோகநாதன் போன்ற மூன்று வாலிபர்கள் சென்றுள்ளனர்.

அப்போது 3 வாலிபர்களும் இணைந்து கத்தியை காட்டி மிரட்டியதோடு, போஸிடம் இருந்த 2000 ரூபாய் பணத்தை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து உடனடியாக அரியமங்கலம் காவல் நிலையத்தில் போஸ் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கத்தியை காட்டி வழிப்பறி செய்த வாலிபர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |