Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஐயோ யாராவது ஓடி வாங்க… செய்வதறியாது தவித்த முதியவர்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

வங்கியில் பணத்தை எடுத்து வந்த முதியவரிடம் மர்ம நபர்கள் ரூ.3 லட்ச ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டியில் சொக்கையன் என்ற முதியவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற அரசுப்பள்ளி அலுவலக உதவியாளர் ஆவார். இந்நிலையில்  காரியாபட்டி வங்கியில் இருந்து 4 லட்சம் ரூபாயை எடுத்து விட்டு சொக்கையன் வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து வங்கியிலிருந்து சொக்கையன் பணம் எடுத்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரிடம் இருந்த பணத்தை பறிக்க முயற்சி செய்துள்ளனர். இதனால் தனது பணத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக சொக்கையன் சத்தம் போட்டுள்ளார்.

அவரின் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வருவதற்குள் மர்ம நபர்கள் அவரிடமிருந்த 4 லட்சத்தையும் பறித்து சென்று விட்டனர்.இதுகுறித்து காவல் நிலையத்தில் சொக்கையன் புகார் செய்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |