Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அய்யோ… என் சங்கிலி போச்சே… கதறும் மூதாட்டி… மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!!

மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலியை மர்மநபர் பறித்த சம்பவம் செந்துறை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்திலுள்ள ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மீனாட்சி. இவர் தன் வீட்டிலிருந்து வெளியே வந்து தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை  பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர்.

இச்சம்பவம் குறித்து மீனாட்சி தளவாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் தளவாய் காவல்துறையினர் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |