Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

விசேஷத்துல கலந்துக்க போனேன்… அதுக்குல்ல இப்படி பன்னிட்டாங்க… விசாரணையில் போலீஸ்…!!

வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை பணம் போன்றவற்றை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியில் வசித்து வருபவர் விவசாயி பக்தவச்சலம். இவர் நேற்று முன்தினம் தனது உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக வீட்டைப் பூட்டி விட்டு சென்றுள்ளார். பின்னர் மாலை வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்பு உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாய் பணமும் 4 பவுன் நகையும் திருடு போனது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அவர் ஆம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் விரைந்து வந்து சோதனை ஈடுபட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |