Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கோவில் உண்டியல் உடைப்பு… சி.சி.டிவி-யில் பதிவான காட்சிகள்… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்…!!

கிராமத்தில் உள்ள கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை அடித்த நபரை நபரை நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அடிக்காமலை கிராமத்தில் அய்யனார் மதுரைவீரன் கோவில் ஒன்று உள்ளது. இங்கு கடந்த 16 ஆம் தேதி பூசாரி பூஜையை முடித்தபின் கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலை வந்து பார்த்த போது கோவில் கதவில் பூட்டியிருந்த பூட்டு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்பு உள்ளே சென்று பார்த்தபோது கோவில் உண்டியலை உடைத்து அதிலிருந்து பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாகி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளார். இதனையடுத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு அவர்கள் மர்ம நபரை தேடிவந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சுற்றித் திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தியபோது அவர் ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்த வீராசாமி என்பது தெரியவந்துள்ளது. அவர்தான் கோவிலின் உண்டியலை உடைத்து 2000 ரூ பணத்தை திருடியவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |