Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சுற்றுலாவுக்கு சென்ற குடும்பம்… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் போன்றவற்றை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நுணுக்கம்பட்டி கிராமத்தில் பச்சையம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் உஷாராணியும் இருவரும் கடந்த 16ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சுற்றுலாவிற்கு சென்றுள்ளனர். அதன்பின் அவர்கள் வீடு திரும்பியதும் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகை, 30 ஆயிரம் ரொக்கப்பணம், லேப்டாப், கேஸ் சிலிண்டர் ஆகியவை திருடு போயிருந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பச்சையம்மாள் பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கோமளவள்ளி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |