Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அறுவடை எந்திரத்தை பார்க்கத்தான் போனேன்… அதுக்குள்ள இப்படி பண்ணிட்டாங்க… மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் பூட்டை உடைத்து டிவி மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக அறுவடை எந்திரம் ஒன்றை வாங்கி வாடகைக்கு விடும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு வி.எம்.ஆர் நகரில் ஒரு சொந்த வீடு உள்ளது. ஆனால் இவர் வலங்கைமான் பகுதியில் உள்ள வீட்டில்தான் மனைவி, தாயார், குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் சம்பவம் நடந்த அன்று வி.எம்.ஆர் நகரில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு வாடகைக்கு விடப்பட்ட எந்திரத்தை கண்காணிப்பதற்காக அங்கு சென்றுள்ளார்.

பின்னர் மறுநாள் காலை வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது ரூபாய் 80000 மதிப்புள்ள எல்.இ.டி. டிவி மற்றும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 43,000 பணம் திருட்டு போயிருந்தது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பாபு வலங்கைமான் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களுடன் விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து மோப்ப நாய் ராக்ஸி சிறிது தூரம் ஓடிய பிறகு யாரையும் கவ்வி பிடிக்காமல் நின்றுள்ளது. மேலும் தடயவியல் நிபுணர்கள் சில தடயங்களையும் கைரேகைகளையும் சேகரித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |