வீட்டிலுள்ள நகை, பணம் உள்ளிட்டவற்றை திருடிவிட்டு சொத்து பத்திரங்கள் பட்டுப்புடவைகள் ஆகியவைகள் எரித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள தாதம்பேட்டை கிராமத்தில் பொன்னம்பலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று கோவிலில் நடைபெறும் விசேஷத்திற்கு கலந்துகொள்வதற்காக வீட்டிலிருந்து சென்றுள்ளார். பிறகு இரவு வீடு திரும்பியுள்ளார். ஆனால் வீட்டின் கதவு உள்புறமாக தாழிடப்பட்டிருந்தது. இதனை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்து பின்புறமாக வீட்டிற்குள் சென்றுள்ளார். அவர்கள் வீட்டிற்குள் செல்லும் போது வீட்டுக்குள் புகை மண்டலமாக இருந்துள்ளது.
அவர் அறையின் உள்ளே சென்று பார்த்தபோது அங்குள்ள பீரோல் உடைக்கப்பட்டு 20 பவுன் நகை மற்றும் 4000 பணம் திருடு போனது தெரிய வந்துள்ளது. மேலும் பீரோவில் உள்ள சொத்து பத்திரங்கள், பட்டுப்புடவைகள் ஆகியவைகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. இந்த தீ பிற இடங்களுக்கு பரவாமல் அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துள்ளார். இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.