Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

ஓடும் பேருந்தில் நடந்த விபரீதம்… அதிர்ச்சியடைந்த பெண்… போலீஸ் வலைவீச்சு…!!

பேருந்திலிருந்து பெண்ணிடம் நகைகளை திருடிய மூன்று பெண்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

புதுச்சேரி மாநிலத்திலுள்ள நெய்வேலி பகுதியில் வசித்து வருபவர் கீதா. இவர் தனது உறவினர் உடைய திருமணத்திற்காக நெய்வேலியில் இருந்து பொம்மையார்புரத்திற்கு சென்றுள்ளார். அவர் வீடு திரும்புவதற்கு புதுவையில் இருந்து தனியார் பேருந்து ஒன்றில் எறியுள்ளார். அப்போது அவருடைய 19 1/2 பவுன் நகையை சிறிய ஒன்றில் வைத்து அதை தனது கைப்பையில் வைத்துள்ளார்.

இதனையடுத்து பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கைப்பையை அங்கிருந்த 3 பெண்கள் வாங்கி வைத்துள்ளனர். அதன்பின் பஸ் புதுவை பேருந்து நிலையத்திற்கு வந்தவுடன் கீதா தனது கைப்பையை வாங்கிள்ளார். உடனே அந்த மூன்று பெண்களும் கீதாவை இடித்துக்கொண்டு கீழே இறங்கியுள்ளனர். இதனால் சந்தேகப்பட்ட கீதா தனது கைப்பையை சோதனை செய்துள்ளார்.

அதில் நகை காணாமல் போனது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கீதா பஸ் நிலையம் முழுவதும் அந்த 3 பெண்களை தேடியுள்ளார். ஆனால் கிடைக்காததால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் பேருந்து நிலையத்தில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு மூன்று பெண்களையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |