விவசாயிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சோமாசிபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி செந்தில்குமார். இவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் அப்பகுதியில் உள்ள முருகன் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரையின் மகனான விஜய் என்பவர் செந்தில்குமார் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த 3000ருபாய் பணம், ஆதார் கார்டு, டிரைவிங் லைசன்ஸ் ஆகியவற்றை பரித்து சென்றுள்ளார்.
இதுகுறித்து செந்தில்குமார் கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த பணம், ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை பறிமுதல் செய்து செந்தில்குமாரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் கைதான விஜய் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.