Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஒரே இடத்தில் இரண்டு வீடு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

ஒரே பகுதியில் இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து நகை பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி பகுதியை சார்ந்தவர் பிச்சுமணி. இவர் தனது உறவினர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ராமநாதபுரம் சென்றுள்ளார். கடந்த 1ஆம் தேதி அவரது வீட்டின் முன் மற்றும் பின்புற கதவு திறக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் பிச்சுமணி மற்றும் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினர் சோதனை செய்த போது வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் சிதறி கிடந்ததை கண்டுள்ளனர். மேலும் பீரோவில் வைத்திருந்த 31/2 பவுன் நகையும் ஒரு கிலோ வெள்ளி பொருட்களையும் திருடிச் சென்றது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் மற்றொரு பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியையான தனலட்சுமியின் வீடு உள்ளது. அவர் சென்னைக்கு தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் ஆளில்லாத நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் 1௦௦௦௦ ரூபாய் பணம், 2 அமெரிக்க டாலர், 2 ரியால் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் வந்தவாசி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். ஒரே பகுதியில் அடுத்தடுத்து நிகழ்ந்த கொள்ளை சம்பவங்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |