விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை காதல் விவகாரங்கள் தான் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது.
அந்த வகையில் ஓவியா-ஆரவ், கவின்-லாஸ்லியா, மகத்-யாஷிகா போன்ற பல காதல் கதைகள் அரங்கேறியுள்ளது. அந்த வகையில் ராபர்ட் மாஸ்டர் ஏற்கனவே திருமணமான ரச்சிதாவை தன்னுடைய கிரஷ் என்று கூறியதோடு அவர் பின்னால் சுற்றிக்கொண்டே இருக்கிறார்.
இதனால் பார்வையாளர்கள் மாஸ்டரை இணையத்தில் விளாசுகிறார்கள். இந்நிலையில் ராபர்ட் மாஸ்டருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகள் இருக்கிறார். இதனையடுத்து 43 வயதாகும் ராபர்ட் மாஸ்டருக்கு தன்னைவிட மிகக் குறைந்த வயதுடைய காதலி ஒருவரும் வெளியே இருக்கிறாராம்.
இதை மாஸ்டரே பிக்பாஸில் கூறியுள்ளார். இந்நிலையில் ரச்சிதா பின்னால் மாஸ்டர் அடிக்கடி சுற்றுவதால் அந்த வயது குறைந்த காதலி மோதிரத்தை வீக்கெண்ட் டிரெசில் அனுப்பி வைத்திருக்கிறாராம். இதை பார்த்த ராபர்ட் மாஸ்டர் அதிர்ச்சியில் இருக்கிறார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
#Robert master atrocities paarthu his GF returned the ring…Master shocked…seinja velai appadi#Biggbosstamil6 pic.twitter.com/c2VU8HbgfY
— Aadhik Sri (@aadhik_vet09) November 19, 2022