Categories
உலக செய்திகள்

“அடடா!”.. அசத்தல்…. வீரர்களுக்கு சேவை செய்ய ரோபோக்கள்… ஒலிம்பிக் போட்டியில் ஆச்சர்யம்…!!!

குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டிருக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் பயிற்சியாளர்களும் உதவிகள் செய்ய ரோபோக்கள் பயன்படுத்தப்படுகிறது.

சீனாவின் தலைநகரான பெய்ஜிங் மாகாணத்தில் இந்த வருடத்திற்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடந்துகொண்டிருக்கிறது. அங்கு ஒலிம்பிக் விளையாட்டு நிர்வாகப் பணியாளர்களும்,  வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களும் மட்டுமே தங்கக்கூடிய வகையில் ஒரு நகர் அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் ஓட்டல் பணியாளர்களிடமிருந்து வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்க, ஒலிம்பிக்கில் கலந்து கொள்பவர்களுக்கு சேவைகள் செய்வதற்காக ரோபோக்கள் பயன்படுத்தப்படுகிறது. அந்த ரோபோக்கள், வீரர்களுக்கு உணவு உட்பட பல சேவைகளை செய்து கொண்டிருக்கின்றன.

மேலும், வீரர்கள் அறைகளிலிருந்து கொண்டு உணவுகளை ஆர்டர் செய்வுடன் ரோபோக்கள்  அறைக்கு வந்து விடுகிறது. அதன்பின்பு, வீரர்கள் உணவு ஆர்டருக்குரிய குறியீட்டு எண்ணை ரோபோக்களில் பதிவிட வேண்டும். அதன்பிறகு ரோபோக்கள் உணவை எடுத்துச்செல்கிறது.

Categories

Tech |