பிரான்சில் ரோபோட்டிக் இஞ்சினியர் ஒருவர் நடக்க முடியாத தனது 16 வயது மகனை எழுந்து நடக்க வைப்பதற்காக ரோபோ உருவாக்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸை சேர்ந்த ரோபோட்டிக் என்ஜினீயரான ஜீன் லூயிஸ் கான்ஸ்டான்ஸா என்பவர் நடக்க முடியாத நிலையில் சர்க்கர நாற்காலியில் முடங்கியிருந்த தனது மகன் ஆஸ்கார் கான்ஸ்டான்ஸா-வின் ( 16 ) கோரிக்கைக்கு இணங்க பிரத்தியேக ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளார். அந்த ரோபோ ஆஸ்கார் “ரோபோ, எழுந்திரு” என்று உத்தரவிட்டால் அவரை தாங்கிக்கொண்டு மெதுவாக எழுகிறது.
அதன்பிறகு அவருடைய மார்பு, இடுப்பு, தோள்கள், கால்கள், முழங்கால்கள் ஆகிய உறுப்புகளுடன் சேர்த்து கட்டப்பட்ட நிலையில் அந்த ரோபோ நடக்க ஆரம்பிக்கிறது. இதுகுறித்து ஜீன் லூயிஸ் கூறுகையில் “இன்னும் பத்து வருடங்களில் உலகில் சக்கர நாற்காலிக்கு அவசியமே இருக்காது என்று நம்பிக்கை தெரிவித்ததோடு, எழுந்து நடக்க முடியாதவர்களுக்காக ரோபோக்கள் Wandercraft நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் லக்சம்பர்க், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் உள்ள டஜன் கணக்கான மருத்துவமனைகளுக்கு உடல் இயக்கத்தை உருவகப்படுத்தும் மற்றும் ஆதரிக்கும் வெளிப்புற சட்டமான Wandercraft-ன் exoskeleton சுமார் 150,000 யூரோக்கள் ஒரு பகுதிக்கு விற்கபட்டுள்ளதாகவும் ஜீன் லூயிஸ் கூறியுள்ளார்.