Categories
உலக செய்திகள்

ஈராக்கில் முக்கிய இராணுவத்தளத்தில் ராக்கெட் தாக்குதல்.. அமெரிக்கா குற்றச்சாட்டு..!!

ஈராக்கில் கடந்த திங்கட்கிழமை அன்று இராணுவத்தளத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

ஈராக்கில் உள்ள Ain al-Asad என்ற இராணுவத் தளத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று மதியம் சுமார் 1:35 மணிக்கு ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. எனினும் நல்லவேளையாக இதனால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும்  வேறு சேதங்கள் ஏதும் ஏற்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது என்று அமெரிக்க தலைமையிலான சர்வதேச இராணுவ படையின் செய்தி தொடர்பாளர், அமெரிக்க ராணுவ தளபதி Wayne Marotto என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்நிலையில் அமெரிக்கா, ஈராக்கில் உள்ள எங்களது படைகளை குறிவைத்து ராக்கெட் தாக்குதல்களை நடத்துவது ஈரானின் ஆதரவுடன் செயல்படும் ஹவுத்தி போராளிகள் தான் என்று கூறியிருக்கிறது. எனினும் கடந்த திங்கட்கிழமை அன்று நடந்த இந்த தாக்குதலுக்கு தற்போது வரை எவரும் பொறுப்பு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |