ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தில் 2 ராக்கெட்டுகள் வீசப்பட்ட நிலையில் அதனை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
ஈராக் தலைநகரான, பாக்தாத்தில் இருக்கும் அமெரிக்க தூதரக பகுதியில் வழக்கமாக அதிக பாதுகாப்பு இருக்கும். இந்நிலையில் அங்கு 2 ராக்கெட்டுகள் வீசப்பட்ட நிலையில், முதல் ராக்கெட்டை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
மேலும், இரண்டாவதாக வீசப்பட்டதாக ராக்கெட்டையும், பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியதில், அங்கிருந்த வாகனங்கள் சேதமடைந்தது. மேலும் கடந்த மாதம் பிரதமர் முஸ்தபா அல் கதாமியின் குடியிருப்பிற்கு அருகேயும் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.