ஆப்கானிஸ்தானில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்த சமயத்தில் ஜனாதிபதி மாளிகையின் அருகில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள காபூல் நகரத்தில் பக்ரீத் பண்டிகைக்கான சிறப்பு தொழுகை நடைபெற்றது. அப்போது ஜனாதிபதி மாளிகையின் அருகில் திடீரென்று மூன்று ராக்கெட்டுகள் வீசப்பட்டது. இதனால் ஏற்பட்ட விளைவுகள் தொடர்பில் தகவல் தெரிவிக்கப்படவில்லை. எனினும் திடீரென்று நடத்தப்பட்ட தாக்குதலால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.
மேலும் காபூல் நகரத்திலுள்ள பல பகுதிகளிலும் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரான, மிர்வாஸ் ஸ்டானிக்ஸாய் கூறுகையில், தற்போது வரை உயிர் சேதம் ஏற்பட்டதாக தெரியவில்லை. எனவே தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்திருக்கிறார்.