அமெரிக்க ராணுவ குடியிருப்பில் ராக்கெட் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வடக்கு ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள இர்பில் விமான நிலையம் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த விமான தளம் அமெரிக்க ராணுவ வளாகம் என தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலால் எந்த உயிர் சேதமும் இதுவரை ஏற்படவில்லை. ராணுவர்கள் தங்கி இருக்கும் இந்தக் குடியிருப்புகளில் மேலும் 2 ராக்கெட் தாக்குதல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பு நடந்த தாக்குதலின் போது உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், சில நிமிடங்கள் வரை அப்பகுதியில் நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தது. இது குறித்து தகவல் அறித்த அதிகாரி ஒருவர் 5 ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்தார். விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ராணுவ குடியிருப்பில் வைக்கப்பட்டுள்ள அமெரிக்கத் துருப்புகள் இந்தத் தாக்குதலின் இலக்காக இருந்திருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.