Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குடிசை வீடு மீது விழுந்த ராக்கெட் பட்டாசு”…. தீயில் சிக்கிய மூதாட்டி… நேர்ந்த சோகம்…!!!!!

குடிசை வீடு மீது ராக்கெட் பட்டாசு விழுந்ததால் தீயில் சிக்கி மூதாட்டி உயிரிழந்தார்.

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகர் பகுதியில் மல்லிகா என்பவர் வீட்டின் மாடியில் இருக்கும் குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார். தீபாவளியை முன்னிட்டு அப்பகுதியில் சென்ற 24ஆம் தேதி காலை முதல் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. காலை 11 மணியளவில் திடீரென ராக்கெட் பட்டாசு ஒன்று தீப்பொறியுடன் வந்து மல்லிகாவின் குடிசை வீடு மீது விழுந்தது.

இதனால் தீ சிறிது நேரத்தில் குடிசை முழுவதும் பரவியது. மல்லிகாவால் குடிசை வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் மேலே சென்று மல்லிகாவை மீட்டார். அப்பொழுது அவருக்கு தீக்காயம் ஏற்பட்டது. மூதாட்டியின் உடல் தீயில் கருகி இருந்தது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மூதாட்டியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |