Categories
மாநில செய்திகள்

மெடிக்கல் காலேஜில் ராக்கிங்..! 7 பேரை வீட்டுக்கு அனுப்பிய நிர்வாகம்… வேலூர் சம்பவத்தில் நடவடிக்கை..!!

வேலூர் தனியார் மருத்துவ கல்லூரி விடுதியில் ராங்கில் ஈடுபட்ட சீனியர் மாணவர்களை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

வேலூரில் அமைந்துள்ள தனியார் மருத்துவ கல்லூரி விடுதியில் ஜூனியர் மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்ததாக வீடியோ ஒன்று வெளியானதால் ராகிங்கில் ஈடுபட்ட ஏழு சீனியர் மாணவர்களை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்த சம்பவம் பெரிய அளவில் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் முதற்கட்ட விசாரணைக்கு பின் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் கூறியுள்ளார்.

கல்லூரியில் நிறுவப்பட்டிருக்கும் கமிட்டிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு கடிதம் கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில் யார் பெயரும் குறிப்பிடப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த கடிதத்தில் மாணவர்கள் தங்கும் விடுதியில் புதிதாக சேர்ந்த மாணவர்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் நடத்தப்பட்டது மட்டுமல்லாமல் ஆடைகளை களைந்து விடுதி வளாகத்தை சுற்றிவர வைத்தனர் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.  இந்த கடிதத்தை சமூக வலைதள பக்கங்களிலும் போஸ்ட் செய்திருக்கின்றனர்.

இதனை அடுத்து இதுபோன்ற செயல்களை ஒருபோதும் நிர்வாகம் சகித்து கொள்ளாது எனவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். எவ்வாறு தங்களை  உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டார்கள் என்பதை அந்த மாணவர்களே தங்களது twitter பக்கத்தில் பதிவு செய்திருக்கின்றனர். இந்த வீடியோ தற்போது வெளியாகி மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீதும், விடுதி வார்டன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |