Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடலுக்கு ”வலிமை தரும்” ராகி மசாலா தோசை..!!

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு   –   50 கிராம்

ராகி மாவு   –   50 கிராம்

உருளைக்கிழங்கு   –  இரண்டு

பெரிய வெங்காயம்  –   ஒன்று

நறுக்கிய பச்சை மிளகாய்  –   ஒன்று

கரம் மசாலாத்தூள் பொடி   –   சிறிதளவு

நறுக்கிய இஞ்சி   –   சிறிதளவு

கடுகு    –   கால் டீஸ்பூன்

எண்ணெய்   –  தேவையான அளவு

உப்பு   –    தேவையான அளவு

செய்முறை:

ராகி மாவுடன் உப்பு, அரிசி மாவு சேர்க்கவும். அதில் கடுகு ,இஞ்சி ,பச்சை மிளகாய், தாளித்துக் கொட்டவும். தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து நன்கு மசித்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி  வதக்கிக் கொள்ளவும்.

இதை மசித்த உருளைக்கிழங்குடன் சேர்க்கவும் .மசாலாத்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.  தோசையாக வார்த்து. இருபுறமும் எண்ணெய் விட்டு தோசையின் நடுவில் உருளைக்கிழங்கு மசாலா வைத்து. சிறிது மஞ்சள் பொடி, கரம் மசாலா பொடி, தூவி இரண்டாக மடிக்கவும். சுவையான ராகி மசாலா தோசை தயார். இதை ரோல் மாதிரியும் சாப்பிடலாம், கேரட் துருவல் சேர்க்கலாம், இதற்கு சைட் டிஷ் தேவை இல்லை.

Categories

Tech |