Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரோகித்தை பதவியிலிருந்து தூக்க சொன்ன விராட் கோலி …. ? வெளியான பரபரப்பு தகவல் ….!!!

துணை கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மாவை நீக்ககோரி அணித் தேர்வாளர்களிடம் விராட் கோலி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலிக்கும் , அதிரடி வீரர்  ரோகித் சர்மாவுக்கும் இடையே பிரச்சினை நிலவி வருவதாக வெகுநாட்களாகவே பேசப்பட்டு வருகிறது .இதனை பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகம் தரப்பில் இருந்து தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தாலும் ,இது தொடர்பான தகவல்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பி வருகின்றன .இதில்  ஒருநாள் தொடரில் இந்திய அணியின் துணை கேப்டன் பதவியில் இருப்பவர் ரோகித் சர்மா .இந்த நிலையில் அவருக்கு வயது அதிகமாகிவிட்டதால் ரோகித் சர்மாவை துணை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று விராட் கோலி அணித் தேர்வாளர்களிடம்  தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனிடையே அணியில் கே.எல்.ராகுலை ஒருநாள் தொடரின்  துணை கேப்டனாகவும் , இளம் வீரர்  ரிஷப் பண்டை டி20 அணிக்கு துணை கேப்டனாகவும்  நியமிக்க வேண்டும் என்று விராட் கோலி தெரிவித்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது .இதனிடையே  விராட் கோலி டி20 கேப்டன் பதவியிலிருந்து விலக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் ,இதுபோன்ற தகவல் கசிந்து இருப்பது ரசிகர்களிடையே குழப்பத்தையும் ,அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |