மியான்மரில் ரோஹிங்யா அகதிகளின் தலைவரை மர்ம நபர் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மியான்மர் நாட்டின் ரோஹிங்யா அகதிகளின் தலைவர் மொகிபுல்லா கொல்லப்பட்டுள்ளார். மொகிபுல்லா முதலில் ஆசிரியராக பணியாற்றினார். அதேசமயம் அகதிகளின் தலைவராகவும் சர்வதேச கூட்டங்களில் ரோஹிங்யா இஸ்லாமியர்களின் பிரதிநிதியாகவும் திகழ்ந்தார். இதனை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு அமெரிக்க வெள்ளை மாளிகையில் முன்னாள் அதிபர் டிரம்ப் தலைமையில் மத சுதந்திரம் குறித்த கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட மொகிபுல்லா மியான்மரில் அவர்களுக்கு நேர்ந்த அநியாயங்கள் மற்றும் துன்புறுத்தல் குறித்து பேசினார். மேலும் இவர் வங்காள தேசத்தின் காக்பஜார் மாவட்டத்தின் உக்கியாவில் அகதிகள் முகாமில் தங்கி இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை அன்று அகதிகள் முகாமிற்கு வந்த மர்ம நபர், மொகிபுல்லாவை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
பின்னர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மொகிபுல்லாவை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறிள்ளனர். தற்போது ரோஹிங்யா அகதிகளிடையே இவரது இறப்பு பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. குறிப்பாக மியான்மரில் இருந்து வங்காள தேசத்திற்கு சுமார் 7 லட்சம் ரோஹிங்யா அகதிகள் வந்தனர். இதன் 2 ஆவது ஆண்டு தினத்தில் 2 லட்சம் அகதிகளை பேரணிக்கு கூட்டி ஊடகங்களில் பெருமளவில் மொகிபுல்லா விமர்சிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.