இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது, கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, இன்னிங்ஸில் காட்ரோல் வீசிய மூன்றாவது ஓவரில் சிக்சரை பறக்கவிட்டார். இதன்மூலம் இந்திய அணியின் ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 400 சிக்சர்களைப் பறக்கவிட்ட முதல் இந்தியர் என்ற புதிய சாதனை ஒன்றை படைத்து அசத்தியுள்ளார்.
மேலும் இவர் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 400 சிக்சர்களை அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இந்தப் பட்டியலில் 534 சிக்சர்களை விளாசிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் முதலிடத்திலும் 476 சிக்சர்களைப் பறக்கவிட்டு பாகிஸ்தானின் அஃப்ரிடி இரண்டாமிடத்திலும் நீடிக்கின்றனர்.